Close Menu
    What's Hot

    கோவை : ஜனநாயகன் பட ரிலீஸின் போதே பச்சைக்குத்திக் கொண்ட தவெக நிர்வாகி..! 

    கடலோர பாதுகாப்பு ஒத்திகை!. புதுக்கோட்டையில் ‘சாகர்காவாச்’ தீவிரவாத தடுப்புப் பயிற்சி தீவிரம்!

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»5 ஆண்டுகள் மட்டுமல்ல காலகாலத்திற்கும் தளபதி தான் முதல்வர்..!! நடிகர் ஜெய் நெகிழ்ச்சி பேச்சு..!!
    Featured

    5 ஆண்டுகள் மட்டுமல்ல காலகாலத்திற்கும் தளபதி தான் முதல்வர்..!! நடிகர் ஜெய் நெகிழ்ச்சி பேச்சு..!!

    editor5By editor5July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 23 at 11.35.33 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூர்: முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விருதம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், கிளித்தான் பட்டறை, வன்டறந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், கேஸ் அடுப்புகள் மற்றும் புடவைகள், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சி விருதம்பட்டில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஜெய், உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அவர், “நிறைய எதிர்ப்புகளையும் தடைகளையும் தாண்டி ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியானது. படம் மொபைலில் வெளியானாலும் தளபதி ரசிகர்கள் தியேட்டரில்தான் பார்ப்போம் என்று உறுதியாக இருக்கிறார்கள். ‘ஐ அம் வெயிட்டிங்’ என காத்திருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

    மேலும், “ஒரு எரிமலை தன்னுள் அனைத்தையும் அடக்கி வைத்திருந்து வெடிப்பது போலவும், ஒரு விதை நீண்ட காலம் காத்திருந்து பெரிய மரமாக மாறுவது போலவும், நமது அண்ணன், தளபதி, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இன்று முதல்வராக உயர்ந்துள்ளார். இந்த ஐந்தாண்டு காலம் மட்டுமல்ல, காலம் காலமாக அவரது ஆட்சி தொடர வேண்டும். நீங்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருங்கள்” என்று வலியுறுத்தினார்.

    தவெகவினரின் இந்த சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சி பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    actor jai jananayagan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!
    Next Article இனி ஸ்கிரீன் கிட்ட யாராச்சு போவீங்க..?? கருவேலி முள்ளை வெட்டிப்போட்ட தியேட்டர் நிர்வாகம்..!! ரசிகர்கள் கலகல!
    editor5

    Related Posts

    கோவை : ஜனநாயகன் பட ரிலீஸின் போதே பச்சைக்குத்திக் கொண்ட தவெக நிர்வாகி..! 

    July 23, 2026

    கடலோர பாதுகாப்பு ஒத்திகை!. புதுக்கோட்டையில் ‘சாகர்காவாச்’ தீவிரவாத தடுப்புப் பயிற்சி தீவிரம்!

    July 23, 2026

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை : ஜனநாயகன் பட ரிலீஸின் போதே பச்சைக்குத்திக் கொண்ட தவெக நிர்வாகி..! 

    கடலோர பாதுகாப்பு ஒத்திகை!. புதுக்கோட்டையில் ‘சாகர்காவாச்’ தீவிரவாத தடுப்புப் பயிற்சி தீவிரம்!

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    திருச்சி;  மூதாட்டி விரலை கடித்துக் குதறிய எலி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.