கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையை அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி நிலையங்களில் அரசியல் சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பியது விதிமீறல் என்றும், மாணவர்களின் கல்விச் சூழலில் அரசியல் கலக்கப்படுவது ஏற்புடையதல்ல என்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது வரை அதிகாரப்பூர்வமான இடமோ அல்லது பள்ளியின் விவரங்களோ வெளியாகவில்லை. இருப்பினும், கல்வித்துறையின் விதிமுறைகளை மீறி இது போன்ற அரசியல் நிகழ்வுகள் பள்ளிகளில் நடத்தப்பட்டிருப்பது குறித்து, உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
