தனது பெயரில் போலியான அலைபேசி எண் உருவாக்கப் பட்டுள்ளதாக நடிகை மீனாட்சி சவுத்ரி ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்ப வசதியான இணையம் எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதோ, அதற்கு சற்றும் குறையாமல் மோசடி பேர்வழிகளும் இணையத்தைப் பயன்படுத்தி பலரையும் ஏமாற்றி வருகிறார்கள்.
வங்கிகளின் பெயரில் மெசேஜ் அனுப்புவது, நண்பர்களின் பெயரில் தகவல் அனுப்புவது, தற்போது நடிகர் நடிகைகளின் பெயரில் தொலைபேசி எண்களை உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு ஏமாற்றுவது என நூதன முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் உஷாராக இருக்கும்படி நடிகை மீனாட்சி சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை…. ஆமாம், இணைய மோசடி பேர்வழிகள் மீனாட்சி சவுத்ரி பெயரில் தொலைபேசி எண் உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற ஒரு பதிவைப் பகிருந்துதான், இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில் உள்ள எண் நான் இல்லை. எனது பெயரில் வரும் அழைப்புகளையோ குறுஞ்செய்தியையோ நம்பி ஏமாறவேண்டாம். அது குறித்து எனக்குத் தெரிவிக்கவும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூர்ன், தி கோட் உள்ளிட்ட படங்களில் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.
