பிரபலங்களின் அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறிவிட்டதாகவும், மனிதநேயமற்ற மனநிலைக்கு நாம் எப்போது மாறினோம் எனவும் நடிகை ராதிகா வேதனை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் இமயம் பாக்யராஜின் மரணம் தொடர்பாக எக்ஸ்தளத்தில் பதிவிட்டு அவர், 50 ஆண்டுகளாக நீடித்த மிகவும் சிறப்பான நட்பிற்கு இன்று இறுதி விடை.

மிகச் சிறந்த படைப்பாளி, முதிர்ந்த எழுத்தாளர், திரைப்பட உலகில் தனக்கென அற்புதமான எல்லைகளை உருவாக்கியவர். எண்ணற்ற சிரிப்புகளையும், மறக்க முடியாத படைப்புகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டவர். என் குடும்பத்திற்கு எப்போதும் அமைதியாகவும், உறுதியான விசுவாசத்துடனும் துணையாக நின்றவர்.

அவரது மறைவு, அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக பணியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

அதே நேரம்,  அமைதியாக அஞ்சலி செலுத்தவும், துயரத்தை மௌனமாக பகிரவும் வேண்டிய இடம், அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் ஒரு கேளிக்கைக் காட்சியாக மாறிவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ளார்.

இந்த அளவுக்கு மனிதநேயமற்ற மனநிலைக்கு நாம் எப்போது மாறினோம்? அல்லது எப்போது இவ்வாறு மாறிவிட்டோம் என ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

இனிமேலாவது இதுபோன்ற சூழ்நிலைகளை கண்ணியமாக கையாளுவதற்கான தெளிவான நடைமுறைகள் (Protocols) மற்றும் ஒருங்கிணைந்த நிர்வாக ஏற்பாடுகளை அரசு மற்றும் திரைப்படத் துறை இணைந்து வகுக்க வேண்டும் எனவும்,  மறைந்தவரின் இறுதி அஞ்சலி முழு கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version