NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போல் NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க முதலமைச்சரையும் வலியுறுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் NLC நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும். நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நடப்பாண்டில் 3,769 கோடிரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது. இப்படி லாபகரமாக இயங்கி வரும் NLC நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடுவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2006-ஆம் ஆண்டு NLC நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த புரட்சித் தலைவி அம்மா எச்சரித்ததன் விளைவாக, அந்தப் பங்கு விற்பனையை அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முழுமையாகக் கைவிட்டது.
2013-ஆம் ஆண்டு SEBI விதிமுறைகளைக் காரணம் காட்டி அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த போது, புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான தமிழக அரசு, கடும் நிதி நெருக்கடிக்கு இடையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 3.56% NLC பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் வாங்கி, NLC நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
இந்நிலையில் மீண்டும் தற்போது மத்திய அரசு NLC நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை விற்பனை செய்ய நடுவடிக்கை எடுத்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு NLC நிறுவனத்தை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கடந்த காலங்களைப் போல், தற்போதும் NLC நிறுவன பங்கு விற்பனையை தடுத்து நிறுத்த அதிமுக போராடும்
மத்திய அரசின் கொள்கை முடிவை எதிர்த்துப் போராடும் NLC ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் சங்கம், பொதுமக்கள் உள்யட்டு அனைவருக்கும், அனைத்திறிதிய அண்ணா திராவிடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2013இல் NLC பங்குகளை அதிமுக அரசு வாங்கியது போல், தற்போதைய தவெக அரசும் அரசும், NLC நிறுவனப் பங்குகளை வாங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்,
NLC பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பதைத் தடுக்க உடனடி நடுவடிக்கைகளை தவெக அரசின் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
