தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நடிகை த்ரிஷா அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே இது நடைபெற வாய்ப்புள்ளதாக தவெகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த சில மாதங்களாக முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் த்ரிஷா தொடர்ந்து இடம்பெற்று வருவதே இந்த ஊகங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. பதவியேற்பு விழா முதல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வரை த்ரிஷாவின் செயல்பாடுகள் கட்சித் தொண்டர்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், சிலருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், தற்போது அந்த நிலை மாறி, அவரது அரசியல் நுழைவு குறித்த நேர்மறையான பேச்சுக்களே அதிகரித்துள்ளன.

இதற்கிடையே முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு திடீரென வாபஸ் பெறப்பட்டது. சங்கீதா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், இது தவெகவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. முன்னர் இந்த வழக்கு கட்சியினரிடையே கவலையை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது அது சரிசெய்யப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.

மதுரையில் சமீபத்தில் ‘த்ரிஷா நற்பணி மன்றம்’ பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதும், அவரது அரசியல் வருகைக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே கருதப்படுகிறது. அந்த போஸ்டர்களில் ‘அக்கா த்ரிஷா’ என்றும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றை ஒட்டியவர்களும் தவெக தொண்டர்களே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெயலலிதா பாணியில் சில கோயில்களுக்கு யானைகள் வழங்கி வருவதும், அரசியலில் ஆர்வம் இருப்பதாக அவர் முன்பு தெரிவித்திருந்ததும், தற்போதைய பேச்சுகளுக்கு வலு சேர்க்கின்றன.

முதல்வர் விஜய் தனது நெருங்கியவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி வரும் பின்னணியில், த்ரிஷாவுக்கும் பொறுப்பு அளிக்கப்படலாம் என்ற கணக்கீடு தவெகவினரிடையே நிலவுகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த இணைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version