இந்தியாஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தத் தொடரில் ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் ஆகியோருக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் இந்திய அணிக்காக அறிமுகமாகும் மூன்றாவது புதிய வீரராக உள்ளார்.

முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழையால் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர் 195 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, அதிரடியும் நிதானமும் கலந்த பேட்டிங்கின் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்னும் புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version