பெண்களுக்கு எதிராகப் பொதுவெளியில் அவதூறாகப் பேசும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய வக்கிரமான கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா எனச் சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களைப் பற்றிப் பொதுவெளியில் கொச்சையாகவும் வக்கிரமாகவும் பேசியுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஒரு சாதாரண நபர் அல்லாமல், பொறுப்பான பதவியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு கேவலமாகப் பேசுவது சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஒருவர் எம்.எல்.ஏ-வாகவோ அல்லது பொது வாழ்க்கையிலோ நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. இதனால்தான் மக்கள் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர்” என்று சாடினார்.

தொடர்ந்து அதிமுகவை விமர்சித்த அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற அவதூறுகளுக்கு உடனே நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால், எடப்பாடி பழனிசாமி திமுகவின் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்க்கால் குதிரை போலச் செயல்படுகிறார். முன்பு ஜெயலலிதாவைப் பற்றி உதயநிதி அவதூறாகப் பேசியபோதும் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தார். உதயநிதியின் இந்த வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையில் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது எவ்விதத் தயட்சியுமின்றிச் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version