2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் திமுக தரப்பில் அப்பாவு மற்றும் அதிமுக தரப்பில் இன்பதுரை ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, அப்பாவு 69, 590 வாக்குகள் பெற்றிருந்தார். ஐ.எஸ்.இன்பதுரைக்கு 69,694வாக்குகள் கிடைத்திருந்தது. இதனால் 104 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள மறுத்த அப்பாவு, தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக் கூறி இன்பதுரை வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுபோன்ற தேர்தல் வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றிபெற்றிருப்பது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளதால், இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது இல்லை. அதே நேரம், இந்த 5 ஆண்டுகளுக்கான எம். எல்.ஏ. ஓய்வூதியம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version