முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று நந்தனம், போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு செய்ததுடன், கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அரசுத் தரப்பிலும் தவெக தரப்பிலும் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த ஆய்வின் போது முதலமைச்சர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக ஐடிவிங் குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று கத்திப்பாரா பகுதியில் 101 அடி உயரத்தில் நின்று “Drone Shot” வைத்து முதலமைச்சர் ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக ஐ.டி.விங்க்,
விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள கத்திப்பாரா பகுதி Red Zone-ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது, இந்த பகுதியில் எந்தவித Drone-களும் பறக்க எவ்வித அனுமதியும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமல் ஒரு முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதற்காக No Fly Zone விதிகளை மீறியிருப்பதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன்,
மத்திய அரசும், @DGCAIndia-வும் இதில் உடனடியாக தலையிட்டு வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
