திமுக வெளியிட்டுள்ள தமிழ்நாடு நாள் வாழ்த்து தொடர்பாக அதிமுக எம்.பி இன்பதுரை திடீர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இன்பதுரை, மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து, தற்போதைய புவியியல் எல்லையோடு தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ஐ ‘தமிழ்நாடு தினமாக’ அறிவித்தது எடப்பாடியார் அரசு எனக் கூறியுள்ளார்.
ஆனால், தமிழ்நாடு என பெயர் சூட்டி 1967 ஜூலை 18-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதன்மைப்படுத்தி தமிழ்நாடு தினத்தை கொண்டாடுகிறது திமுக. உண்மையில் “தமிழ்நாடு” என்ற பெயர் சட்டபூர்வமாக அமலுக்கு வந்தது 1969 ஜனவரி 14 எனக் குறிப்பிட்டுள்ள இன்பதுரை, எனது கேள்வி : குழந்தை பிறந்த நாளைக் கொண்டாடுவார்களா? அல்லது பெயர் சூட்டிய நாளை கொண்டாடுவார்களா? என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
