மிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, அந்த ஆவணத்தை திருப்பதிக்கு எடுத்துச் சென்று பூஜை செய்ததாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக, இது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், “ பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பு எந்த பொதுவெளியிலும் வைக்கக் கூடாது. ஆனால், சட்டமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை எடுத்து, தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, திருப்பதியில் வைத்து பூஜை செய்துள்ளார் தவெக அரசின் வேளாண்துறை அமைச்சர்!

பூஜை செய்யும் பொருட்டு அமைச்சரிடம் இருந்து நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்கும் என்பது, சட்டப்படி குற்றம் இல்லையா? ரகசிய காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற விதிகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு குற்றத்தைச் செய்துள்ள அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?

(பி.கு. : வெற்றிச் சான்றிதழை அமைச்சர் விருதை மகள் மறந்துவிட்டு வந்ததைப் போல, ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்ததையே மறந்துவிட்டேன் என இந்த ஆச்சரியக்குறி அமைச்சர் வினோத் சொன்னாலும் ஆச்சரியமில்லை!)” எனக் கிண்டலாக கூறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version