தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் சுமார் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவை நடத்தினர். இவிஎம் இயந்திரம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்தனர்.

பின்னர் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சென்னை திருவான்மியூர் சட்டமன்ற தொகுதியில் முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் அஜித்குமார். நேற்று பெல்ஜியத்திலிருந்து சென்னை திரும்பிய அவர், இன்று காலை 6.50மணியளவில் வெள்ளை நிற கோட்சூட்டில் மாஸாக திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை தந்தார். அதிகாரிகளின் சரிபார்ப்புக்கு பின்னர், தனது வாக்கினை முதல் ஆளாய் செலுத்திவிட்டு சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version