72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில் அமரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது.

நமது அமரன் குடும்பம் முழுவதற்கும் இது ஒரு பெருமையான நாள்.

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் (2024), சிறந்த இயக்குநர் விருதை வென்ற எனது அன்பிற்குரிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசை விருதைப் பெற்ற ஜி.வி. பிரகாஷ், மற்றும் சிறந்த படத்தொகுப்பு விருதைப் பெற்ற ஆர். கலைவாணன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அதேபோல் தேசிய விருதுகளை வென்றுள்ள Sun Pictures, தனுஷ், Sathya Jyothi Films, அருண் மாதேஸ்வரன், அனல் அரசு, சுரேன் ஜி., சச்சனா நமிதாஸ், டி.எஸ். ஹரி ஹர சுதன், மற்றும் எட்மண்ட் ரான்சன் ஆகியோருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version