திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேல் திருப்பதி செல்வதற்கு, பொதுவாக படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழி போக்குவரத்திலும் செல்லலாம். சில பக்தர்கள் வேண்டுதல் வைத்து சுமார் 3,550 படிக்கட்டுகள் ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்வர். அப்படி,

கர்நாடாகவை சேர்ந்த 116 வயது மூதாட்டி 9 கிலோ மீட்டர் பயணம் செய்து 3,550 படிக்கட்டுகள் ஏறிச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். வெங்கடேஸ்வர சுவாமி மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் திருப்பதிக்கு வந்த அவர், குடும்பத்தினர் உதவியுடன் நடைபயாமாக மலைப்பாதையில் 3,550 படிக்கட்டுகள் ஏறிச் சென்றவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version