கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் “WE THE LEADERS” அமைப்பின் முதல் மாநாடான போதையில்லா தமிழகம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மாநாடு இன்று மாலை அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்காக பொள்ளாச்சி – கோவை நெடுஞ்சாலையில் ஆட்சி பட்டி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டாம் தேதி அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மாநாடு நடைபெறும் இடத்தில் தற்போது மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி, மேடை, இருக்கைகள் மற்றும் வாகன நிறுத்தம் இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் மாநாடு நடைபெறும் இடத்தின் நுழைவாயில் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது.
முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும், குடிநீர் மற்றும் கழிப்பறை ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
வீ த லீடர்ஸ் அடையாள அட்டையுடன் வருபவர்களே மாநாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகளை அண்ணாமலை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.
