விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ, சி.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு சி.விஜயபாஸ்கர் ஆதரவளித்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி அறிவித்தார். மேலும் கட்சி தாவல் சட்டப்படி தனக்கு எதிராக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கல் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருந்த எம்.எல்.ஏக்களில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தங்கள். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக இருந்த வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர்.

இவர்களில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடியை சந்திக்காததோடு, அமைதியாக இருந்து வந்தனர். இதனால் இவர்கள் அதிமுகவிலேயே தொடர்வார்களா அல்லது வெளியேறுவார்களா என சந்தேகம் நிலவி வந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் சி.விஜயபாஸ்கர், அதிமுக தலைமைக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்.  

தலைமை என்பது

அதிகாரமோ, ஆணவமோ அல்ல

அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு

உழைக்கும் தொண்டர்களின் மனதை

வெல்ல முடியாத தலைமை,

மக்களின் மனதை எப்படி வெல்லும்?

உணர்வுகளை மதிக்காத இடத்தில்

உண்மையான பயணம் சாத்தியமா?

எனப் பதிவிட்டிருந்தார்.

இதன் மூலம் அவர் விரைவில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதோடு, அதிமுகவில் இருந்தும் விலகுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்,

இன்று பிற்பகலில் சி.விஜயபாஸ்கர் தனது அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டப்பேரவைக்கு சென்ற அவர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது விலகல் கடிதத்தை அளித்தார். அவரது கடிதம் முறையாக இருந்ததாகக் கூறி சபாநாயகரும், அதனை ஏற்றுக் கொண்டார்.

இதனால் மூலம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபின் பதவி விலகிய அதிமுக  எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 42ஆக குறைந்துள்ளது.

சி.விஜயபாஸ்கரும், மற்றவர்களைப் போல் தவெகவில் இணைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

2001ம் ஆண்டு முதன்முறையாக புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் விஜயபாஸ்கர்.  அதன் பின்னர் 2006 தேர்தல் தவிர்த்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வரை விராலிமலை தொகுதியில் தொடர்ந்து போட்டிய்ட்டு வெற்றி பெற்றவர் விஜயபாஸ்கர்.2013-இல் முதன்முறை அமைச்சரானவர், தொடர்ந்து 2016இலும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

சி.விஜபாஸ்கர் ராஜினாமா மூலம் விராலிமலை உள்பட 6 தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியாக உள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version