தமிழக அரசு சார்பில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க உப்பளங்கள் மீன் பிடி தொழிலை அளித்து இடங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள் உட்பள தொழிலாளர்கள் மீன்பிடி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகே அமைந்துள்ளது முள்ளக்காடு, கோவளம், பழைய காயல், உள்ளிட்ட பகுதிகள். இந்த பகுதிகள் முழுவதும் உப்பளம் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் கோவளம் பசுவந்தரை தண்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பட்டா நிலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உப்பு தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் உப்பள தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த பகுதியில் சுமார் தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் மூலம் சுமார் 3000 ஏக்கர் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க தாரை வார்க்கப்பட உள்ளது. இதற்காக உப்பு உற்பத்தியாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் உப்பள தொழிலாளர்கள் மீனவர்கள் ஆகியோர் தமிழக வெற்றி கழக அரசு கப்பல் கட்டும் தளத்தை எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு கொண்டு வரக்கூடாது கப்பல் மட்டும் தளம் அமைப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் தமிழக வெற்றி கழக அரசு உப்பு தொழிலை மீன்பிடி தொழிலை அழித்துவிட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version