தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரை பார்த்து  மது பிரியர்  ஒருவர் போதையில் நீங்கள் TVK கட்சி நிர்வாகி தானே எனக் கேட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் கடையநல்லூர் முழுவதும் பல்வேறு இடங்களில் தென்காசி  மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு அசுத்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி சுத்தமாக வைத்துக் வைத்துக்கொள்ள வேண்டுமென ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார். அப்போது,

அங்கே வந்த மதுபோதை ஆசாமி, ஆட்சியரை பார்த்து, ரூ.5க்கு பதில் ரூ.10 வரை வசூல் செய்யப்படுகிறது, நீங்கள் TVK கட்சி தானே எனக் கேள்வி கேட்க, அருகே இருந்தவர்கள், அவர் கலெக்டர் எனக் கூற, சாரி சாரி சார் என மதுப்பிரியர் சொல்ல, அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது.

தொடர்ந்து அங்கே உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு சென்ற ஆட்சியர், பேருந்து நிலையத்தை முழுமையாக சைக்கிள் நிறுத்தும் பகுதியாக ஏன் மாற்றினீர்கள்? உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சைக்கிள் ஸ்டாண்ட் பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version