23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் முதல் பாதியில் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றும் முயற்சியில் அர்ஜென்டினா களமிறங்கவுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version