செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றி கழக நிர்வாகியுமான வீரா (எ) வீராசாமி ஒப்பந்ததாரிடம் ரூ.1.30லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தாழம்பூர் காவல்துறையினர் அதிரடியாக  வீராசாமியை கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கியதாக இணையத்தில் வெளியிட்ட வீடியோவால் ஒப்பந்ததாரர் நவீன் என்பவரை மிரட்டியதாகவும், கூறப்படும் நிலையில் ஒப்பந்ததாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் வீராசாமியை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் வீராசாமி தவெகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version