Close Menu
    What's Hot

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    பாஜகவில் திடீர் திருப்பம்.. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பதவி விலகல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இனி இந்த டைமில் தான் தரிசனம்.. திருச்செந்தூர் கோவிலில் புது ரூல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
    Featured

    இனி இந்த டைமில் தான் தரிசனம்.. திருச்செந்தூர் கோவிலில் புது ரூல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!

    editor5By editor5July 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 23 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் திடீரென தரிசன நேரத்துக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் சிறப்பு வரிசை ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சண்முக விலாச மண்டபத்தை இரும்பு கிரில் கேட் அமைத்து முழுமையாக அடைத்து வைத்திருப்பது பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொது மற்றும் கட்டண வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

    இதுவரை சாதாரண நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனத்துக்கு அனுமதித்து வந்த கோவில் நிர்வாகம், எந்த முன் அறிவிப்பும், பக்தர்களிடம் கருத்து கேட்பும் இன்றி திடீரென புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், கட்டண தரிசனத்துக்கு மாலை 6.30 மணி வரையும், பொது தரிசனத்துக்கு இரவு 7 மணி வரையும் மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நேரம் மாறுபடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “பக்தர்களின் வசதியை கருத்தில் கொள்ளாமல், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல்படுவது வருத்தமளிக்கிறது” என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கோவில் நிர்வாகம் உடனடியாக பக்தர்கள் நலன் கருதி உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்செந்தூர் கோவில் தமிழகத்தின் முக்கிய யாத்திரை தலங்களில் ஒன்று. கடல் அருகே அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே நிர்வாகம் பக்தர்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    devotees time restrictions tiruchendur murugan temple
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை : ’பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்திடுக’..! விவசாயிகள் போராட்டம்..!
    Next Article விஜய் பெங்களூரு வந்தால் இதுதான் நடக்கும்.. வாட்டாள் நாகராஜ் பரபரப்பு அறிவிப்பு!
    editor5

    Related Posts

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    July 31, 2026

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    July 31, 2026

    பாஜகவில் திடீர் திருப்பம்.. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பதவி விலகல்..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    பாஜகவில் திடீர் திருப்பம்.. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பதவி விலகல்..!!

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.