கேரளம் மாநிலம் காசர்கோடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆட்டோ காசர்கோடு சந்தை சந்திப்பு அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பள்ளி மாணவர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் ஆட்டோ ஓட்டுனரும் ஆட்டோவின் அடியில் சிக்கி தவித்தார். இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காசர்கோடு போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது ஆட்டோவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாணவர்களை ஏற்றியதுடன் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
