இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை பயிற்சி ஆட்டம் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
2025-ன் 18வது ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 20 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. அதே மாதத்தில், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் இங்கிலாந்து செல்ல உள்ளது.
இதையடுத்து இந்திய ஜூனியர் அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான சிறப்பாக விளையாடி வரும் சூர்யவன்ஷி-யும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஐபிஎல்-ல் தங்களின் திறமையை வெளிப்படுத்திய 2 இளம் வீரர்களுக்கு இந்திய ஜூனியர் அணியில் இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version