பிரபல  நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மிக ஆழமான சமூக விழிப்புணர்வுச் செய்தி அடங்கிய இன்ஸ்டா ஸ்டோரி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தனது பதிவில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் இடையே நிலவும் பெருமிதங்களைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள மீனா,
“உங்கள் சாதி, மதம், பிறந்த இடம் மற்றும் பாலினம் ஆகியவை அனைத்தும் பிறப்பால் தானாக அமைந்தவை. அவற்றைப் பெறுவதற்கு நீங்கள் எந்த முயற்சியையும் அல்லது உழைப்பையும் செய்யவில்லை; எனவே, அவற்றைக் குறித்துப் பெருமைப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அதற்குப் பதிலாக உங்கள் நற்குணம், உங்கள் நற்செயல்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் மனித நேயத்துடன் தேர்ந்தெடுக்கும் வழிகள் ஆகியவற்றைக் குறித்து மட்டுமே பெருமை கொள்ளுங்கள்” எனத் தனது கருத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

சாதி, மத உணர்வுகளை விட மனிதநேயமும் தனி மனிதக் குணமுமே ஒருவரின் உண்மையான அடையாளத்தைத் தீர்மானிக்கும் என்ற மீனாவின்கருத்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது. பலரும் இக்கருத்தைப் பகிர்ந்து சமூக ஊடகங்களில் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version