யக்குநர் பாரதிராஜாவின் உடல், அவரது விருப்பப்படி  அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படும் என அவரது  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் கிராமிய மண்வாசனையை உலக அரங்கில் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவையடுத்து அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மலேசியாவில் இருந்த அவரது மகள் ஜனனி சென்னை வந்து சேர்ந்துள்ளார். குடும்பத்தினருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, பாரதிராஜாவின் நீண்டநாள் விருப்பப்படி அவரது சொந்த ஊரிலேயே உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இயக்குநர் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை 7 மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர் அவரது உடல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில் அமைந்துள்ள அவரது தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

நாளை காலை அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன. பின்னர் அவரது உடல் சொந்த ஊர் மண்ணில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இறுதிச்சடங்கு நிகழ்வில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெருமளவில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிராஜா இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version