நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் அமைதி வழியில் போராடினர்.
இதேபோல் திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் முறைகேடுகளை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்தும், அதற்குத் துணை நின்ற ஒன்றிய அரசைக் கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்கள் எரித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திராபிரதானின் உருவபொம்மையின் மீது தண்ணீர் ஊற்றியும், காலில் மிதித்தும் தீயை அணைத்தனர்.
மேலும், தொடர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும், தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
