டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) தொண்டர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி கட்சியினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 36 நாள்கள் வரை நீடித்த இந்தப் போராட்டத்தின் முடிவில், ஜூலை 25ம் தேதி அப்போதைய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளையும் முழுமையாகத் திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களும், தடுத்து வைக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவதாகவும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது இனி எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் டெல்லி காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
