சென்னை மக்களின் பயணத்திற்கு ஏதுவாக மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து செல்லக் கூடிய மின்சார ரயிலில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
30 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பிரேக் ஷூவில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்து ரயிலை அனுப்பி வைத்தனர்.
