தமிழகத்தில் வாக்கு சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 72,032 வாக்குச்சாவடி மையங்களும், 41 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், மேற்கொள்ள உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்திற்கு இதுவரை 300 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுவது, வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி வேண்டிய காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
