சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை அமெரிக்க தூதர் சந்தித்து பேசினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இன்று (ஜூன் 22) தமிழ்நாடு வந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியச் சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார், பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் மரியானா எல்.நெய்ஷூலர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version