மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டாங்கெட்கோ கூடுதல் டிஜிபி மற்றும் தலைமை விழிப்புப் பணி அதிகாரி ஆயுஷ் மணி திவாரி– காவல்துறை தலைமையக கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன்– மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர்– சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையர் பிரவேஷ் குமார்– கடலோர பாதுகாப்புக் குழும (CSG) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு ஐஜி எஸ்.ராஜேஸ்வரி– திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி– சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஜி. கார்த்திகேயன்– சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜிபி டாக்டர் பி. ஷமூன்டீஸ்வரி – சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும், காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி ஏ.ஜி. பாபு– சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராகவும், சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையர் கே. ஜோஷி நிர்மல் குமார்– சேலம் மாநகர காவல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜி பி.சி. தேன்மொழி– சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) கூடுதல் ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.ராதிகா– காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும், காவல்துறை நிர்வாகம் ஐஜி சி.மகேஸ்வரி– ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவு–1 ஐஜியாகவும், டிவிஏசி சிறப்பு விசாரணைப் பிரிவு–1 ஐஜி ஏ.டி. துரைக்குமார்– காவல்துறை நிர்வாகப் பிரிவு (Establishment) ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

