12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுதினர். மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவு தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகளுக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14417, 104, 14416 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
