Close Menu
    What's Hot

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    டெல்லி போராட்டம்: “சோனம் வாங்சுடன் கருத்து வேறுபாடா…?” – சிஜேபி மறுப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!
    Featured

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    editor5By editor5July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 31 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரம் குறித்து மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; தமிழகத்திற்கு நாம் ஏற்கெனவே திறந்துவிட்ட தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 400 டிஎம்சி தண்ணீருக்கும் மேல் நாம் தமிழகத்துக்கு வழங்கி இருக்கிறோம்.

    கடந்த ஆண்டு கர்நாடகாவில் நல்ல மழை பெய்ததால் தமிழகத்துக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கப்பட்டது. தமிழகத்துக்கு தண்ணீர் விட மாட்டோம் கர்நாடக அணைகளுக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 3,500 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போதிய அளவு நீர் இல்லை என கூறியபோதும் காவிரி மேலாண்மை ஆணையம் அதனை ஏற்கவில்லை. கடுமையான சூழ்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வேதனையளிக்கிறது.

    தமிழகத்துக்கு தண்ணீர் விட மாட்டோம் என காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கூறிவிட்டோம். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். இன்னும் உறுதியாகவில்லை ”நானும், தமிழக முதலமைச்சர் விஜய்யும் அவரவர் மாநில மக்களின் நலன்களின் அக்கறையாக உள்ளோம். நாங்கள் இருவரும் இரு மாநில நிலவரம் குறித்து தொலைபேசியில் பரஸ்பரம் பேசிக்கொண்டோம்.

    அவர் 3-ந்தேதி கர்நாடகா வருவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல் சூழல் காரணமாக அவரது வருகை இன்னும் உறுதியாகவில்லை. கர்நாடகா வர வேண்டாம்.. கர்நாடகத்தில் தற்போதைய சூழல் சரியில்லை. பதற்றமான சூழலில் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். தமிழக முதல்-அமைச்சர் வரும்போது கர்நாடகாவில் போராட்டம் நடந்தால் சரியாக இருக்காது. எங்கள் மாநிலத்திற்கு விருந்தினராக வருவோருக்கு எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. சிறிது காலம் காத்திருக்கலாம். அதன் பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    cm vijay dk shiva kumar karnataka
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!
    Next Article முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!
    editor5

    Related Posts

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    July 31, 2026

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    July 31, 2026

    டெல்லி போராட்டம்: “சோனம் வாங்சுடன் கருத்து வேறுபாடா…?” – சிஜேபி மறுப்பு!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    டெல்லி போராட்டம்: “சோனம் வாங்சுடன் கருத்து வேறுபாடா…?” – சிஜேபி மறுப்பு!

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.