கோவை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனார். போலீசில் புகார் அளிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தநிலையில், மர்மமான முறையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக கார்த்தி மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு, சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தி காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இறுதிச் சடங்களுக்குப் பிறகு சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்புக்கு தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version