கோவை பெரியகடை வீதியில் உள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் பணத்தைத் திருடிய புகாரில், 4 கோயில் ஊழியர்கள் மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்ட 4 அதிகாரிகள் உட்பட மொத்தம் 8 பேரைப் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 15, 2026 அன்று கோனியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு உண்டியலை மட்டும் திட்டமிட்டுத் திருடியதாகக் கோயில் ஊழியர்களான பாலசுப்ரமணியன் (சீட்டு விற்பனையாளர்), சரவணன் (அலுவலக உதவியாளர்), பிரதிப்குமார் (திருவலகு) மற்றும் கிருஷ்ணராஜ் (பூசாரி) ஆகிய 4 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தத் திருட்டுச் சம்பவத்தைக் கண்டறியத் தவறியது மற்றும் கடமை தவறியதற்காக அறநிலையத் துறை அதிகாரிகள் ராம்குமார் (சரக ஆய்வாளர்), உதயகுமார் (சரக ஆய்வாளர்), குமார் (செயல் அலுவலர்) மற்றும் உஷா நந்தினி (உதவி ஆணையர்) ஆகிய 4 அதிகாரிகளும் உடனடியாகக் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 8 பேர் மீதும் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version