திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் சுமார் 18 பேர் உயிரிழந்தனர். பலர் இன்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில்,
அம்மோனியா வாயுவை பாதுகாப்புடன் அகற்றுவது குறித்தும் மேலும் அகற்றப்படும் அமோனியா வாயுவை எடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து வருவாய்த்துறை மருத்துவ குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதே போன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். சரியாக எட்டு மணி அளவில் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு எடுக்கப்பட உள்ள நிலையில் அனைத்து நிலை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், ,” மக்கள் பீதியடைய வேண்டாம். தொழிற்சாலையில் உள்ள அமோனியாவை பாதுகாப்போடு வெளியே எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு தினங்களாக முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ குழு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அம்மோனியா பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டது. இன்று இந்த அமோனியா அகற்றப்பட உள்ளது” என்றார்.
இன்று மாலைக்குள் முழுவதும் அகற்றப்படும் எனவும், இல்லை என்றால் நாளையும் இப்பணி தொடரும் என்றார். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேவையான தொழிலும் பாதுகாப்பு சம்பந்தமான ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையில் இருந்து அகற்றப்படும் அம்மோனியா பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது.
அதேபோன்று தொழிற்சாலையில் இருந்து அகற்றப்பட்ட உணவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை கட்டத்தில் உள்ளது என்றும் மக்கள் மீது அடைய வேண்டாம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.
