2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் சீமா கலிராம்னா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்ற சீமா கலிராம்னா, தனது மூன்றாவது முயற்சியில் 58.65 மீட்டர் தூரம் வட்டு எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். குழந்தை பிறந்து தாய்மை அடைந்த பிறகு, தீவிர பயிற்சியை மேற்கொண்டு சர்வதேச அரங்கில் சீமா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
இப்போட்டியில் ஜமைக்காவின் சமந்தா ஹால் (61.66 மீ) தங்கப் பதக்கத்தையும், கனடாவின் ஜூலியா டங்க்ஸ் (60.67 மீ) வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இதே போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரரான நிதி ராணி 57.10 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.
