காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் 60 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளன. 74 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தநிலையில், இன்று (ஜூலை 26) நடைபெற்ற 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் மணிப்பூரைச் சேர்ந்த ரிஷிகாந்தா சிங் பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்பிரிவில் 121 கிலோ எடையைத் தூக்கிப் புதிய காமன்வெல்த் சாதனையை அவர் பதிவு செய்தார். ‘கிளீன் அண்ட் ஜெர்க்பிரிவில் 143 கிலோ எடையைத் தூக்கினார். ஒட்டுமொத்தமாக 264 கிலோ எடையைத் தூக்கி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இப்போட்டியில் மலேசியாவின் முகமது அனிக் கஸ்தான் (273 கிலோ) தங்கப் பதக்கத்தையும், கென்யாவின் ஜோஷூவா அமுங்கா (260 கிலோ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பாரா காமன்வெல்த் போட்டிகளைத் தவிர்த்து, தற்போதைய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பளுதூக்குதல் பிரிவில் கிடைத்த முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version