ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்திய ஒலிம்பிக் சங்க (IOA) தலைவர் பி.டி. உஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியா 15 பதக்கங்களை வென்றுள்ளது. இன்னும் பல பதக்கங்கள் வர உள்ளன என்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ள பி.டி.உஷா, மாற்றுத்திறனாளி வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் ‘டீம் இந்தியா’வின் ஒரு பகுதிதான். தடகளப் போட்டிகளில் பதக்கம் வெல்வது மிகவும் கடினம். ஆனால் இந்த முறை நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 10,000 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளோம். இது மிகவும் சிறப்பான செயல்பாடு” என்றார்.

மேலும், “2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தும் போது, இதைவிட அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்றும் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கான அரசின் ஆதரவு குறித்து பேசிய அவர், “என் காலத்தில் இருந்ததைப் போல இப்போது இல்லை. வீரர்கள் கேட்கும் அனைத்தையும் அரசு வழங்குகிறது. சர்வதேச அளவிலான பயிற்சி, போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு, உடற்தகுதி நிபுணர்கள், மசாஜ் வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படுகின்றன. இந்திய ஒலிம்பிக் சங்கமும் வீரர்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. மத்திய அரசு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆகியவை ஒரே அணியாக இணைந்து செயல்படுவதால்தான் இந்த வெற்றிகள் சாத்தியமாகின்றன” என்று பி.டி. உஷா கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version