2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஜமைக்காவின் ரோமைன் பெக்போர்ட் என்பவரும் 2.25 மீட்டர் உயரத்தையே தாண்டினார். இருப்பினும், முயற்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஜமைக்கா வீரருக்கு தங்கப் பதக்கமும், சர்வேஷ் குஷாரேவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகனான சர்வேஷ் குஷாரே, சிறு வயது முதலே பல்வேறு நிதி நெருக்கடிகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு தடகளப் பயிற்சி பெற்றவர்.

கடந்த 2022 காமன்வெல்த் போட்டிகளில் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தநிலையில், தற்போது சர்வேஷ் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய தடகள வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய ஆண் வீரர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version