சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து நேற்று நள்ளிரவு மதுரை நோக்கி 20 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் அயன்பேரையூர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது தீடீரென பேருந்து தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதனை அறிந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்து நிறுத்தியதுடன், பயணிகளை கீழே இறக்கினார். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
