டெல்லியில் நடைபெற்ற  என்.டி.ஏ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.இந்தக் கூட்டத்தில் அண்மையில் உருவான இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியினர் முதல் முறையாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்றார். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமையாக தொடர்வதாகவும் கூறினார்.  அண்மையில் பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்த போது விவசாயிகளின் நலனில் அரசு கவனம் செலுத்துவதையும் அவர் எடுத்துரைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version