தமிழக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். அண்மையில் தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக அவர் இன்று (ஜூன் 3) பதவியேற்றார்.

இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழக டிஜிபியாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று சிறைத்துறை கூடுதல் டிஜிபி-யாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபி-யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version