அரக்கோணம் சம்பவத்தையும் , டாஸ்மாக் வழக்கில் அரசியல் பின்னணியுடன் தலைமறைவாக உள்ளவர்களையும் மறைமுகமாக குறிப்பிட்டு அதிமுக சார்பில் சுவரொட்டி.

அரக்கோணத்தில் திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதுடன் , திமுக முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்குமாறு வற்புறுத்தியதாகவும் கல்லூரி மாணவி புகாரளித்துள்ளார்.

தெய்வச் செயலை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் ‘ அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..’ என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமர்சித்திருந்தார் .

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று ‘ அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி…’ என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

20 வயதான 20 பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றச்செயல்கள் செய்த தெய்வச் செயலின் செயலை கண்டிக்கமாட்டாரா அப்பா..? எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் பெண்கள்…

என்றும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அதில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஸ் , திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில் டாஸ்மாக் முறைகேட்டில் பின்னணியில் இருப்போர் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானோர் என அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில்

” யார் அந்த தம்பி…? டாஸ்மாக் காஞு எந்த தம்பிக்கு போச்சு..? ”

என்ற சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version