2021-ல் ஆட்சி அமைத்த திமுக, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றிவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) பேசினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பெண்கள் அச்சமில்லாமல் வாழ்வாதை என்டிஏ உறுதி செய்யும் என்றார். 2021-ல் ஆட்சி அமைத்த திமுக, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார். நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்துவதாக கூறிய திமுக உயர்த்தவில்லை என்றும் நெல்லை பாதுகாப்பதற்காக உரிய கிடங்குகள் தமிழ்நாட்டில் இல்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்பதால், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் திமுக தாமதப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பணத்திற்கு வேலைகள் விற்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகள் நசுக்கப்படும் என்றார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைவது மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்துடன் வாழும் சூழல் இருப்பதாக குற்றம்சாட்டி அவர், திமுகவைச் சேர்ந்தவர்களே பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதை சுட்டிக்காட்டினார். என்டிஏ ஆட்சியில் பெண்களுக்கு தீங்கிழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version