47 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டு மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மதுரை உத்தங்குடியில் இதற்காக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சியின் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைக்க, பொதுக்குழு முறைப்படி தொடங்கியது. பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து ராணி எலிசபெத், போப் பிரான்சிஸ், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரெங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் திமுகவில் மேலும் 2 புதிய அணிகள் உருவாக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆசிரியர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி என 2 அணிகள் அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் திமுகவின் சார்பு அணிகள் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. இதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான சிலவற்றை இப்போது பார்ப்போம்..

கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்திடுக

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளைசெம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்! -தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! .. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!.. கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்! ..இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!…சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!..ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப்பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!.. போன்ற முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொகுதி மறுவரையறை கூடாது..

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல்உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக்கண்டனம்! –
உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!-
மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக! – சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக! -தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது! – ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்! – ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான திமுக தலைவருக்குப் பாராட்டு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசுக்கு கண்டம்..

குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கானகைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம், மன்னார் வளைகுடா ஆழ்கடலில்எண்ணெய்க் கிணறுகள் அமைத்தல், தமிழ்நாட்டின் திட்டங்களுக்குப்போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு எனத் திட்டமிட்ட வஞ்சகங்களும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்துதல், அரசியல் எதிரிகள்மீது வெறுப்பு பரப்புரைப் பேச்சுகளை உமிழ்தல், பொய் வழக்குகள்பாய்ச்சுதல், அரசு எந்திரங்களைச் சட்ட மீறலாகப் பயன்படுத்தி மாநிலஅரசுகளுக்கு மிரட்டல் விடுத்தல், ஒன்றிய அரசின் இலஞ்ச – ஊழல்களைஆதாரத்துடன் எதிர்த்து எழுதும், பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள், சிறை போன்ற அநீதிகளுமே தொடர்வதால், இத்தகைய சர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது என்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியரசுத் துணைத்தலைவருக்கு கண்டனம்

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பே பெரியது என்பதையும், நியமனப் பதவியான ஆளுநர் பதவிக்குச் சட்டமன்ற முடிவுகளை நிறுத்தி வைக்கும் அதிகாரமில்லை என்பதையும் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காத்துள்ள இந்த மகத்தான தீர்ப்பு குறித்து, உள்நோக்கம் கொண்ட விமர்சனப் பார்வையுடன், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version