சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டையில் வாயைத் திறங்க CM என்னும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான 17-வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. முதல்நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உரை நிகழ்த்த உள்ளார்.

சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். அந்த கருப்பு பேட்ஜில் வாயைத் திறங்க CM என அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் தவெக ஆட்சிக்கு எதிரான பதாகைகளையும் தங்கள் கைகளில் ஏந்தியபடி ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அந்தப் பதாகைகளில் திரையில் நாயகன், தரையில் வில்லன்,  கதறல் கேட்குதா CM?, தூய சக்தி அல்ல துயர சக்தி, REELS இங்கே REAL எங்கே?, மாற்றம் அல்ல ஏமாற்றம் ஆகிய வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

சட்டப்பேரவையின் முதல்நாளிலேயே பேரவை வளாகத்திலேயே தனது எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலித்துள்ள திமுக, சட்டப்பேரவைக்குள் இன்னும் என்னென்ன செய்யக் காத்திருக்கிறதோ?

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version