கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டினால் அமைச்சர் பதவியை துறக்க தயார் என சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், திருவள்ளுர் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள  காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்த அவருக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார், தலைமையில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,

பின்னர்  காங்கிரஸ் முன்னாள், முதலமைச்சர், மற்றும் கமிட்டி தலைவர்களான, முத்துரங்கம், பக்தவச்சலம்,  மரகதசந்திரசேகர், உள்ளிட்டவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்  ”அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக வருவதாக தெரிவித்தார். சுற்றுலா தளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குறிப்பாக பழவேற்காடு, பூண்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட எந்த காலத்திலும் எதிர்ப்போம் எனவும், ஒரு பிடி மண்ணை கட எடுக்க முடியாது எனவும், அப்படி ஒரு நிலைமை வந்தால்,எதையும் துறக்க தயார் எனவும், அமைச்சர் பதவியையும் துறக்க தயார்” எனவும் தெரிவித்தார்.

இதில் திருவள்ளூர் பாராளுமன்ற அமைப்பாளர்  ஏஜி சிதம்பரம், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் திவாகர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்  வெங்கடேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version