Close Menu
    What's Hot

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    தேசியக் கட்சிகள் செய்தால் தவறில்லை.. மாநிலக் கட்சிகள் செய்தால் தவறா?. திருமாவளவன் கேள்வி!

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அடுத்தடுத்து வெளியாகும் திமுக ஊழல்!. நாடே கைக்கொட்டி சிரிக்கும்!. தவெக ஐடி விங் பதிலடி!
    Featured

    அடுத்தடுத்து வெளியாகும் திமுக ஊழல்!. நாடே கைக்கொட்டி சிரிக்கும்!. தவெக ஐடி விங் பதிலடி!

    Editor web3By Editor web3July 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tvk it wing dmk sivasankar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசியதற்கு, “திமுகவின் ஒவ்வோர் ஊழலாக வெளிவரும்போது, உங்கள் அழுக்கு மூட்டைகள் அவிழுமே. அப்போது என்ன செய்வீர்கள்? தானாகவே வந்து சிக்கலில் சிக்கப் போகிறது திமுக. அன்றும் திமுகவைப் பார்த்து நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகிறது” என தவெக தகவல் தொழில்நுட்ப அணி பதில் கொடுத்துள்ளது.

    இது குறித்து தவெக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில், “தீயசக்தி திமுகவின் முன்னாள் அமைச்சர், பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் புளுகுமூட்டை சிவசங்கர், இன்று நம் முதலமைச்சரின் பேச்சால் மனம் பதறி, பதற்றத்தில் மனநிலை தவறி, உளறி இருக்கிறார். யோகிபாபுவின் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பேற்றுள்ளது போன்று பேசி இருக்கிறார்.

    கரூரில் பேசும்போது, திமுக ஆட்சியில் காவல் துறையைக் கையாண்ட விதத்தையே நம் வெற்றித் தலைவர் சுட்டிக் காட்டினார். இன்றைக்கு இருக்கும் காவல் துறை, யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது சிவசங்கர்? அது தெரியாமல் உளறலாமா நீங்கள்? இன்றைக்குப் பாதுகாப்பு எவ்வளவு தெளிவாக இருந்தது என்பது, கரூர் மக்களுக்குத் தெரியும். அன்றைக்குப் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆனால், எப்போதும் உண்மையை மூடி மறைப்பதுதானே தி.மு.க.வின் மனநிலை?

    ஊழலின் ஊற்றுக்கண், திமுக. ஊழல் கடலில் தினந்தோறும் நீச்சல் அடிக்கும் திமுகவினருக்கு, செந்தில் பாலாஜி என்ற புனிதருக்குப் பாதபூஜை நடத்துவது கூச்சமாக இருக்க வாய்ப்பே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைத் தீயசக்தி திமுகவில் சேர்த்துவிட்டு, இன்று உங்கள் வாயையே வாஷிங் மெஷினாக்கி, துப்புக்கெட்ட தனமாக மென்று துவைப்பதால் உங்கள் கட்சியின் அழுக்கு நீங்கிவிடுமா சிவசங்கர்?

    அறிஞர் அண்ணா சொன்ன அகப்பையில் எண்ணெய்க் கதையை ஏதோ உங்கள் சிந்தனை போல உளறுவதுதான் உங்கள் அறிவு நேர்மையா சிவசங்கர்? பிறர் அறிவைத் திருடுவதிலும் ஊழல் செய்வதுதான் திமுகவின் உண்மை குணம் என்பது வெளிப்பட்டுவிட்டதே. திமுகவின் ஒவ்வோர் ஊழலாக வெளிவரும்போது, உங்கள் அழுக்கு மூட்டைகள் அவிழுமே. அப்போது என்ன செய்வீர்கள்? தானாகவே வந்து சிக்கலில் சிக்கப் போகிறது திமுக. அன்றும் திமுகவைப் பார்த்து நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகிறது” எனத் தெரிவித்துள்ளது.

    cm Vijay speech dmk sivasankar TVK IT Wing
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமிக்கல் மெரினோவின் கடைசி நேர மேஜிக்!. பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!
    Next Article விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    July 11, 2026

    தேசியக் கட்சிகள் செய்தால் தவறில்லை.. மாநிலக் கட்சிகள் செய்தால் தவறா?. திருமாவளவன் கேள்வி!

    July 11, 2026

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    தேசியக் கட்சிகள் செய்தால் தவறில்லை.. மாநிலக் கட்சிகள் செய்தால் தவறா?. திருமாவளவன் கேள்வி!

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    அடுத்தடுத்து வெளியாகும் திமுக ஊழல்!. நாடே கைக்கொட்டி சிரிக்கும்!. தவெக ஐடி விங் பதிலடி!

    மிக்கல் மெரினோவின் கடைசி நேர மேஜிக்!. பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.